விளாத்திகுளத்தில் மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு இரங்கல் கூட்டம்

விளாத்திகுளத்தில் மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

Update: 2022-10-25 18:45 GMT

எட்டயபுரம்:

கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த பா.செயப்பிரகாசம் விளாத்திகுளம்அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 23-ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடலுக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு இரங்கலை தெரிவித்தனர். மேலும், அவருக்கு எழுத்தாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்