ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்
ஸ்ரீரங்கம் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று காலை திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். கோவில் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பேட்டரி காரில் சென்று கோவிலை சுற்றிப்பாா்த்தார். கோவிலில் உள்ள கடைகளுக்கு சென்று மங்கல பொருட்களை அவர் வாங்கினார். லதா ரஜினிகாந்த் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள் கோவிலில் பெருமளவு திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.