லாரி மோதி தொழிலாளி சாவு

திருக்கோவிலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-12 17:40 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55) கூலி தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள பால்பண்ணை அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு பால் ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக சேட்டு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேட்டுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்