லாரி மோதி வாலிபர் பலி

சீர்காழி அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்

Update: 2022-06-09 17:35 GMT


சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் தென்னலக்குடி கடைவீதி அருகே சென்னையிலிருந்து ஆக்கூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அந்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் மூலங்குடி பகுதியை சேர்ந்த பாலு மகன் நந்தகுமார் (வயது 32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நந்தகுமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விருதுநகர் மாவட்டம் அண்ண சிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சேர்மக்கனி (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Tags:    

மேலும் செய்திகள்