விக்கிரவாண்டி அருகேலாரி மோதி ரேஷன் கடை பணியாளர் சாவு
விக்கிரவாண்டி அருகே லாரி மோதி ரேஷன் கடை பணியாளர் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட்(வயது 46). இவர் மதுரப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரேஷன் கடை விற்பனையாளராக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் பணி முடிந்து டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ராதாபுரத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது அண்ணன் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.