அங்கநாதவலசை உயர்நிலைப் பள்ளிக்கு மடிக்கணினி

அங்கநாதவலசை உயர்நிலைப் பள்ளிக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.

Update: 2022-11-20 16:50 GMT

திருப்பத்தூர் தாலுகா விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் அண்ணாமலை. இவர் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வசித்து வருகிறார். ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் அங்கநாத வலசை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ50 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகேசன் தலைமை தாங்கி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பில் செயலாளர் பெருமாள் அண்ணாமலை வழங்கிய மடிக்கணினையை பெற்று பள்ளிக்கு வழங்கி பேசினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.குணசேகரன், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இந்துமதி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்