மொழி என்பது நமக்கு எழுத்தா இல்லாமல் ரத்தமாக உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2023-07-02 06:17 GMT

சென்னை,

கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில்

காணொளி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் உயிராக, போராட்டத்தின்போது வாளாக உள்ளது. மொழியின் பெயரில் வாரிசுகளுக்கு பெயர் வைக்கும் இனம் தமிழினம் மட்டுமே. தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும்.

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும், மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடி. மொழி என்பது நமக்கு எழுத்தா இல்லாமல் ரத்தமாக உள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்