நடைபாதையில் மண் சரிவு

பந்தலூரில் தொடர் மழையால் நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டது.;

Update: 2023-08-08 22:15 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா உப்பட்டி, பொன்னானி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலை மற்றும் நடைபாதை ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. தொடர் மழையால் அய்யன்கொல்லியில் இருந்து மழவன் சேரம்பாடி வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் அம்மன்காவு அருகே பொட்டசிறா பகுதியில் நடைபாதை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சேகர் என்பவரது வீடு அந்தரத்தில் தொங்கும் நிலையில் காணப்படுகிறது. இதேபோல் நடைபாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. எனவே, அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்