பருத்தி விவசாயத்திற்காக நிலங்களை தீ வைத்து எரிக்கும் விவசாயிகள்

பருத்தி விவசாயத்திற்காக நிலங்களை தீ வைத்து எரிக்கும் விவசாயிகள்

Update: 2023-03-01 18:33 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக விளங்கக்கூடிய திருவாடானை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கினார்கள். குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.அதுபோல் ஆர்.எஸ். மங்கலம் சுற்றிய பல கிராமங்களிலும் வைகை தண்ணீர் வரத்தால் நெல் விவசாயம் செழிப்படைந்துள்ளது. அதேநேரம் சோழந்தூர் பிர்காவுக்குட்பட்ட ஏராளமான கிராமங்களில் வைகை தண்ணீர் பாசன வசதி இல்லாததாலும் பருவமழை பெய்யாததாலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டன. இந்தநிலையில் ஆர்.எஸ். மங்கலத்தை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாய பணிகள் முடிவடைந்து விட்டன. நெல் விவசாய சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர், மங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் காய்ந்து கிடக்கும் வைக்கோல் செடிகளை தீ வைத்து எரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்ட விவசாய நிலத்தை டிராக்டர் மூலம் உழுது பருத்தி விவசாயத்திற்காக பருத்தி விதைகளை தூவும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்