நில உடமை விவரங்களை புதிய திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்
பூதலூர் வட்டார விவசாயிகள் நில உடமை விவரங்களை புதிய திட்டத்தில் பதிவு செய்து பயன் ெபறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் வட்டார விவசாயிகள் நில உடமை விவரங்களை புதிய திட்டத்தில் பதிவு செய்து பயன் ெபறலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் அடுக்குத்திட்டம்
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச்சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை- வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய்- பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
நில உடமை குறித்த ஆவணம்
இதனை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நிலஉடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.