72 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி

வேலூர் கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-06-04 13:28 GMT

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு உள்ளிட்ட அனைத்து தாலுகாக்களிலும் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் 72 பேருக்கு வேலூரில் 30 நாட்கள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. வேலூர் கோட்டையில் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு நில அளவை துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பயிற்சி அளித்தனர். எவ்வாறு நிலத்தை அளக்க வேண்டும் என அதற்கான உபகரணங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒரு கிராமத்தின் அதிகாரியாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலம் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். அது அவர்களின் பணிக்கு முக்கியமானதாகும். நிலத்தை அளவிடுதல், மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவை அவர்களின் பணிக்கு தேவைப்படும். இயற்கை இடர்பாடுகளின்போது பயிர்சேத விவரம் கணக்கிடும் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்வார்கள். நிலம் தொடர்பான அனைத்து விவரங்களும் அவர்கள் தெரிந்திருந்தால் இழப்பு மதிப்பீடு சரியாக இருக்கும்.

இந்த பயிற்சி செயல்விளக்கமாகவும், வகுப்புகள் மூலமாகவும் கற்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்