நேரு நர்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா

நேரு நர்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா நடந்தது.

Update: 2022-09-15 20:16 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா நடந்தது. கல்லூரி தலைவர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். பேராசிரியை புஷ்பா ஹெர்பர்ட் வரவேற்று பேசினார். திருக்குறுங்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நைட்டிங்கேல் உறுதிமொழியை கல்லூரி முதல்வர் மார்க்கெட் ரஞ்சிதம் வாசிக்க, மாணவிகள் அனைவரும் ஏற்றனர். விளக்கின் மகத்துவம் குறித்து பேராசிரியை வேணுமாலினி பேசினார்.

சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தலைவர் ஹெலன் லாரன்ஸ் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. தலைமை செவிலியர் அமுதா ராமலட்சுமி, துறை செவிலியர் கணபதி, பேராசிரியைகள் சுபி பாய், சந்திரமதி, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பேபி உமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்