லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு

கூந்தலூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகே கூந்தலூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான லட்சுமி நாராயண பெருமாள் வேணுகோபாலசாமி கோவில், ஆற்றங்கரை விநாயகர் கோவில் ஆகிய 2 கோவில்களில் நேற்று குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்