முதலுதவி சிகிச்சை அளித்த லட்சுமணன் எம்.எல்.ஏ.
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ. முதலுதவி சிகிச்சை அளித்ததாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் நேற்று காலை அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது மகாராஜபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த மேரி என்ற பெண் விபத்தில் காயமடைந்தார். உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய லட்சுமணன் எம்.எல்.ஏ., அந்த பெண்ணுக்கு உரிய மருத்துவம் பார்த்தார். எம்.பி.பி.எஸ். ஆர்த்தோ முடித்துள்ள அவர், பெண்ணின் கையில் எலும்புமுறிவு ஏற்பட்டதை அறிந்து முதலுதவியாக கட்டுப்போட்டு சிகிச்சை அளித்தார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏ.வின் இத்தகைய மனிதநேய செயலைக்கண்டு பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.