லட்சுமணம்பட்டி பாம்பாலம்மன் கோவில் திருவிழா
லட்சுமணம்பட்டி பாம்பாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.
வெள்ளியணை
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லட்சுமணம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாம்பலம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இக்கோவில் திருவிழா
அடுத்த மாதம் (ஜுன்) 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம் லட்சுமணம்பட்டி ஊர் பொதுமக்கள் பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள மலையாள சுவாமி கோவில் அருகில் ஒன்று திரண்டு அங்கிருந்த தீர்த்தக் கிணற்றில் நீராடி, தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக பாம்பலம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்தனர்.