பயணியிடம் 'பர்ஸ்' திருட முயன்ற பெண் கைது

பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்ஸ் திருட முயன்ற ஆந்திராவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 19:33 GMT

பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்ஸ் திருட முயன்ற ஆந்திராவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பர்ஸ் திருட முயற்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49) தொழிலாளி. சம்பவத்தன்று ரமேஷ் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது அவருடைய சட்டைப் பையிலிருந்த பர்சை ஒரு பெண் திருட முயன்றார்.

உடனே அருகில் நின்றவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நகரி மாவட்டத்தை சேர்ந்த முனியசாமி மனைவி லில்லி (45) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லில்லியை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்