மீன்பண்ணையில் பிணமாக மிதந்த பெண்

மேலூர் அருேக மீன் பண்ணைதண்ணீரில் பெண் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-18 20:30 GMT

மேலூர்,

மேலூர் அருேக மீன் பண்ணைதண்ணீரில் பெண் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் பண்ணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவில் பஞ்ச பாண்டவர் மலை உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை உள்ளது.

இங்கு மீன் வளர்க்கும் குட்டையில் உள்ள தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு பெண் பிணமாக மிதந்துள்ளார்.

இதைக்கண்ட அந்தபகுதியை சேர்ந்தவர்கள் கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து தண்ணீரில் பிணமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும் இதுதொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த பகுதியை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்