நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-04-29 19:15 GMT

நீடாமங்கலம்;

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சொத்து பிரச்சினை

நீடாமங்கலம் அருகே உள்ள அரையூர் கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன் (வயது46). இவருடைய தம்பி சுந்தர்ராஜன்(43). இவர்களுக்கிடையே கடந்த 8 வருடங்களாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.சம்பவத்தன்று உலகநாதன் தனது மனைவி சத்யாவுடன் நீடாமங்கலம் பேரூராட்சி பாப்பையன்தோப்பு என்ற பகுதியில் உள்ள இடத்தை பார்க்க கடந்த 5 நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுந்தர்ராஜன் (43) அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உலகநாதனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கைது

இது குறித்து உலகநாதன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உலகநாதன் நேற்று தனது தாய் மற்றும் மனைவி சத்யா ஆகியோருடன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.பின்னர் அவர் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உலகநாதனை தடுத்து நிறுத்தி அவர் உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் உலகநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுந்தர்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்