சிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு

சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.;

Update:2023-10-26 01:18 IST

சிவகாசி தாலுகாவில் உள்ள தாயில்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா (வயது 62). இவர் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையில் மருந்து அரைக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த சண்முகையா தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி விட்டு தீப்பெட்டி ஆலையின் ஒருபகுதியில் ஓய்வு எடுக்க சென்றார். அப்போது அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் முத்துராமலிங்கம் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்