கொண்டலாம்பட்டி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு

கொண்டலாம்பட்டி அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-12-28 21:05 GMT

கொண்டலாம்பட்டி,

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் அழகு நகரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரும், இவரது வீட்டின் அருகே உள்ள ராஜா, இவருடைய மனைவி செல்வி ஆகிய 3 பேரும், இளம்பிள்ளை சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து சண்முகவேல், செல்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் சண்முகவேல் பலியானார். செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்