மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலி
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் காயிதேமில்லத் நகர் 7-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் சையது முஸ்தபா ஆரிப் (வயது 19). இவரது நண்பர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சித்ரங்குடி பகுதி கிழகாஞ்சரன் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் ரகுபதி ராஜா (22). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏ.சி. மெக்கானிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். சையது முஸ்தபா ஆரிப் வீடு உள்ள காயல்பட்டினத்தில் மேலநெசவு தெருவில் ரகுபதிராஜா வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவில் காயல்பட்டினம் திரும்புவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் காயல்பட்டினத்துக்கு வந்து கொண்டிருந்தனர். பழையகாயல் ராமச்சந்திரபுரம் பாலம் அருகே வந்தபோது, திருச்செந்தூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரகுபதிராஜா பரிதாபமாக இறந்தார். சையது முஸ்தபா ஆரிப் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை ெபற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று ரகுபதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான விளாத்திகுளம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ரவி (43) என்பவரை கைது செய்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக ரகுபதிராஜா இறந்து போனார். செய்யது முகமது ஆரீப் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மருத்துவமனை சென்று ரகுபதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான விளாத்திகுளம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ரவி(43) என்பவரை கைது செய்தனர்.