மினிலாரி மோதி தொழிலாளி சாவு

மினிலாரி மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-07-20 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

மயிலாடுதுறை மாவட்டம் காளிநத்தம் சந்தை தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 54) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். மோவூர் மெயின் ரோடு அரசு பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்