சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த தொழிலாளி கைது
சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பென்னகோணம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 23), கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அச்சிறுமியை வெங்கடேஷ் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வெங்கடேசை நேற்று கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.