தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரத்தில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-10 19:30 GMT

ராசிபுரம்:-

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் பொங்கல் சிறப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குலசேகரன் தொழிலாளர்கள் மாநில பொதுச் சங்கம் சார்பில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தலைவர் சுந்தராம்பாள் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஆலோசகர் நல்வினை விஸ்வராஜ், நிறுவன தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். புதிய வாழ்க்கை கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் மாதேஸ்வரன், மாவட்டத் துணைத் தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்