மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

Update: 2022-12-17 17:10 GMT


மத்திய, மாநில அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

திருப்பூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார்.

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய அரசு திட்டம் என்றாலும், மாநில அரசு திட்டம் என்றாலும் அலுவலர்கள் முழு கவனம் செலுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சுப்பராயன் எம்.பி. கூறினார்.

வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு

நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, தாட்கோ உள்ளிட்ட அனைத்து துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்

மேலும் செய்திகள்