தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம்
தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தலைஞாயிறு பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை திறப்பு
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே மே 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலைஞாயிறு, காடந்தேத்தி, ஆய்மூர், வடுகூர், மணக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
குறுவை சாகுபடி பணி
இந்த நிலையில் கடைமடை பகுதியான தலைஞாயிறு பகுதிக்கு காவிரி நீர் வந்ததால் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் நாற்றங்கால் அமைத்து பராமரிக்கும் பணியிலும், வயலை உழுதல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஆர்வமுடம் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் வரும் என நம்பிக்கையுடன் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.