குருத்தோலை ஞாயிறு பவனி
பாவூர்சத்திரம் அருகே குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கோவிலூற்று சேகரம் மேல கிருஷ்ணபேரி சபை கிறிஸ்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கீத பவனி நடைபெற்றது. இதையொட்டி சபை ஊழியர் ஆனந்த் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. முன்னதாக சபைமக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியவாறு ஓசன்னா பாடல்கள் பாடியவாறு முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தனர்.