வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Update: 2022-06-01 16:28 GMT

திருப்பூர்:

திருப்பூர் நொச்சிப்பாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி சுப்பிரமணி என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் வீரபாண்டி போலீசார் திருப்பூர் ராஜவீதியை சேர்ந்த யாசர் அராபத் (வயது 23) உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஏற்கனவே 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

யாசர் அராபத் மீது ஒரு கொலைமுயற்சி மற்றும் ஒரு கூட்டுக்கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் உள்ள யாசர் அராபத்திடம், ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று போலீசார் வழங்கினார்கள். திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 43 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்