உடுமலையையடுத்த சின்னவீரன்பட்டி பெரிய விநாயகர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.விநாயகர், தன்னாசியப்பன், துர்க்கை அம்மன் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருவிளக்கு வழிபாடு, ஐம்பூதம் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று காலை 2 ம் கால வேள்வி, திராவியாகுதி, நாடி சந்தானம், உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.