மானாமதுரை அருகே சொர்ணவாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

மானாமதுரை அருகே சொர்ணவாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது/

Update: 2023-04-25 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை 27-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக விக்னேஷ்வரர் பூஜை, முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு 2-வது கால யாகபூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சியும், மாலை 7 மணிக்கு 3-வது கால யாக பூஜையும், பூர்ணாகுதி, சுமங்கலி பூஜை, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை(வியாழக்கிழமை) காலை 4-வது கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 10.30மணிக்குள் சாந்தநாயகி அம்பாள், சொர்ணவாரீஸ்வரர் ஆகிய கோபுரங்களில் உள்ள கலசத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மகாபாபிஷேகம் நிகழ்ச்சியும், இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மேலநெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாராஜ்குமார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். மேலும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்