ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னிவனம் சிவன் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னிவனம் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-08 18:10 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சென்னிவனம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழமையான கோவில் என்ற பெருமையை பெற்றது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்தது. இதனைக் கண்ட சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த கோவிலை பழமை மாறாமல் சீரமைத்து வந்தனர். கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்