கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

செங்கம் அருகே கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-04-16 12:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தாழையூத்து கிராமத்தில் கிருஷ்ணர், அங்காளபரமேஸ்வரி, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

அதைத் தொடர்ந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்