கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-06-26 09:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவ சூரிய வழிபாடு மிகவும் விசேஷமானது ஆகும். இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வெகு விமரிசையாக விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடந்தது.

கும்பாபிஷேக விழாவில் கொளப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கொளப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்