கரப்பாடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரப்பாடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நெகமம்
நெகமம் அடுத்த கரப்பாடி கிராமத்தில் பழைமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருத்தேரும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. விக்னேஷ்வர பூஜை, நாடிசந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. காலை யாத்ராதானம், சங்கல்யம், கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து விநாயகர், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமானம் மூலஸ்தானம் மகா கும்பாபிஷேகம், நடைபெற்றது. திருத்தேர் வடம் பிடித்து (வெள்ளோட்டம்) கோவிலை சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து இருந்தனர்.
இதேபோல் நெகமம் அடுத்த நஞ்சேகவுண்டன்புதூரில் மிகவும் பழைமையான எர்ரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல்வேறு வகையான புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் காலை மங்கள இசை, விநாயகர் பூஜை, பூர்ணாஹுதி நடைபெற்றது அம்மனுக்கு பல்வேறு வகையான கனிவகை அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.