காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி கே.ஆண்டியப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், முனியப்பன், ஞான விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு, கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மகா லட்சுமி பூஜை, பூர்ணாகுதி, வேதபாராயணம், திருமுறை பாராயணம், 16 வகை தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதையடுத்து காலை 9 மணி அளவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கம்பிளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.