காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-01 20:02 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே பிசிண்டி கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர்கோவில், காளியம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மகாகணபதி ஹோமம், மகா சங்கல்பம் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்