அருள் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
அருள் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் மேரிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 2 நாட்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று யாகசாலை பூஜையை தொடர்ந்து கடம்புறப்பாடும், கும்பாபிஷேகமும் நடந்தது. பின்னர் கோபுர கலசத்திற்கும், மூலவருக்கும் புனித நீர்ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி யோகேஸ்வரன் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.