குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
திருவாரூரில் இருந்து குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
நாகர்கோவில்,
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து 1,250 டன் ரேஷன் அரிசி மூடைகள் ரெயில் மூலம் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் இந்த அரிசி வந்துள்ளது. பின்னர் அரிசி மூடைகளை லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு சென்றனர். அரிசி மூடைகளை ஏற்றுவதற்காக ரெயில்வே ரோட்டில் ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.