குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா

குலையன்கரிசல் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-25 10:09 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் வில்லிசை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும், பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, நையாண்டி மேளத்துடன் கரகாட்டமும், அம்மனுக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றது. பின்பு அம்மனின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்