குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: பக்தர்கள் வாகன நிறுத்துமிடத்தில் சீரமைக்கும் பணி தீவிரம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வாகன நிறுத்துமிடத்தில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-09-25 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்.15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவதற்காக 72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 144 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. குலசேகரன்பட்டினம் தருவை குளம், கருங்காளிஅம்மன் கோவில் சன்னதி தெரு சந்திப்பு, கேஸ் குடோன் அருகே, மணப்பாடு செல்லும் சாலை உட்பட்ட பல்வேறு இடங்களிலும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்