மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

மாணவ-மாணவிகளுக்கு பாராட்டி கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2022-07-19 15:53 GMT

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரம் மற்றும் தேசிய திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.7.22 முதல் 15.7.22 வரை தொழில்நெறி விழிப்புணர்வு, திறன் வாரம் மற்றும் தேசிய திறன் நாள் நிகழ்ச்சிகளாக மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, மகளிர், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான பல்வேறு தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பது தொடர்பாகவும், இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவது குறித்தும் மற்றும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது எப்படி போன்ற பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்து கொண்டு பேசினர். இதுதொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்