சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.

Update: 2023-02-03 19:19 GMT

வடக்கன்குளம்:

பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் பிரிவில் இரட்டை கம்பு வீச்சு போட்டியில் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவன் தனிஷ் ரோஷன் 3-வது இடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவனையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பாரத் ஆகியோரையும் பள்ளி தாளாளர் திவாகரன் மற்றும் பள்ளி முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்