சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு
சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற காயலபட்டினம் பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு அரியலூர் பழுவூரில் அரசு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சிலம்பாட்ட போட்டியில் 50 கிலோ எடை மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர் அப்துல் முத்தலிப் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் செய்யது அகமது, சிலம்பாட்ட பயிற்சியாளர்கள் வி.ஸ்டீபன், வேல்முருகன், உடற்பயிற்சி ஆசிரியர் ஜமால் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.