போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு

போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு

Update: 2023-01-06 18:45 GMT

கீழ்வேளூரில் ஓட்டலில் தவறிவிட்ட 3 பவுன் வளையத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போலீஸ்காரர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் சிவராஜ். நேற்றுமுன்தினம் காலை இவர் கீழ்வேளூர் அரசாணி குளம் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது சாப்பாட்டு மேஜைக்கு அடியில் 3 பவுன் வளையம் கிடந்துள்ளது. இதனை சிவராஜ் எடுத்து சென்று கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, தங்க வளையத்தை தவறவிட்ட கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி பரங்கிநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் மகன் திராவிட செல்வம் என்பதும், இவர் ஓட்டலில் சாப்பிட சென்ற போது தங்க வளையத்தை தவறவிட்டதும் தெரியவந்தது.

பாராட்டு

நேற்று நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தங்க வளையத்தை தவறவிட்ட திராவிடசெல்வத்திடம் ஒப்படைத்தார். பின்னர் தங்க வளையத்தை கண்டெடுத்து கொடுத்த போலீஸ்காரர் சிவராஜின் நேர்மையை பாராட்டி அவருக்கு பரிசு அளித்தார்.

மேலும் சிவராஜின் நேர்மையை நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்