பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

ஓசூரில் மாயமான என்ஜினீயரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை பாராட்டினார்.

Update: 2022-07-31 17:26 GMT

ஓசூர்

ஓசூர் நேரு நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் விஸ்வகுமார் (வயது23). என்ஜினீயர். இவர் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் 8 மாதங்களாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து என்ஜினீயரின் பெற்றோர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ஜினீயரை தேடி வந்தனர். அவர் கோவை அன்னூர் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று என்ஜினீயரை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்