கோவில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்திய இந்து-முஸ்லிம்களுக்கு பாராட்டு
கோவில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்திய இந்து-முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் கிராமத்தில் கோவில் திருவிழாவை இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்தினர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்த வி.களத்தூர் இந்து, முஸ்லிம் மதங்களை சோ்ந்த முக்கியஸ்தர்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு நேற்று நேரில் அழைத்து மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி ஆகியோர் பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.