விவசாயிக்கு பாராட்டு

தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் புதுமையான விவசாயி என்ற விருதினை வழங்கியது.

Update: 2023-03-26 19:00 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே தாதம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவக்குமாருக்கு சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்ததற்காக இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் புதுமையான விவசாயி என்ற விருதினை வழங்கியது. இந்நிலையில் விருது பெற்ற விவசாயி சிவக்குமாரை அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் அவரை பாராட்டினர். தனக்கு ஊக்கம் அளித்த வேளாண் விஞ்ஞானிகளுக்கு விவசாயி சிவகுமார் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்