தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

ராஜபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update:2022-11-27 00:54 IST
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கும், நகரத்தின் தூய்மைக்கான பணிகளில் உதவி புரிந்த தன்னார்வலர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். விழாவில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்