நெல்லை வக்கீல் அணிக்கு பாராட்டு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை வக்கீல் அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடியில் கடந்த மாதம் நடந்த மாநில அளவிலான வக்கீல்களுக்கான கபடி போட்டியில், நெல்லை வக்கீல்கள் அணி வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா, நெல்லை வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், நிர்வாகக்குழு தலைவருமான பிரிசில்லா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.