குடியாத்தம் மாணவர் 4 தங்கம் வென்று சாதனை

நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் மாணவர் 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-12-02 17:26 GMT

நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் குடியாத்தம் மாணவர் 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டி

குடியாத்தம் தாலுகா சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.மூர்த்தி ஆசிய வலுதூக்கும் வீரர். இவரது மகன் எம்.ஜெயமாருதி (வயது 17). வேலூரில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் தந்தையைப் போலவே 12 வயதிலிருந்து வலுதூக்கும் பயிற்சி செய்து வலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் கேரளாவில் நடந்த தேசிய சப் ஜூனியர், ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் 74 கிலோ உடல் எடை பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆக்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் 74 கிலோ உடல் எடை பிரிவில், ஸ்குவாட் பிரிவில் 253 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் பெற்று புதிய சாதனை நிகழ்த்தினார்.

4 தங்கம் வென்று சாதனை

பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ எடை தூக்கி தங்க பதக்கமும். டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ எடை தூக்கியதற்கு தங்கப்பதக்கம் என மொத்தம் நான்கு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

நான்கு தங்கப்பதக்கங்களை வென்று தமிழகத்திற்கும், வேலூர் மாவட்டத்திற்கும், பிறந்த ஊரான சீவூர் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனால் சீவூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்